இந்தக் கலைவடிவம் அல்லது ஆட்டம் பொது சமூகத்தால் எந்தப்பெயரில் அழைக்கப்படுகிறது, அதை நிகழ்த்தும் நீங்கள் எவ்வாறு பெயரிடுகிறீர்கள்?
இது ஒரு சடங்கு முறையா, நிகழ்த்துக்கலை மரபா, இசை வடிவமா, நடனமா, அல்லது எல்லாம் சேர்ந்ததா?
இது எந்தப் பகுதியில் அல்லது எந்த பண்பாட்டுச் சூழலில் தோன்றியது, யாருக்கானது?
கலைஞர்கள் சார்ந்த சமூகம் அல்லது அவர்களின் வழித்தோன்றல்கள் இதை ஒரு தனித்துவமான வடிவமாக எவ்வாறு அடையாளப்படுத்திகிறார்கள்?
2. வரலாற்றுத் தொன்மையும் அதன் நீட்சியும்
இந்தக் கலை வடிவத்தின் தோற்றம் குறித்து சமூகத்தின் வாய்மொழி வரலாறுகள் அல்லது பெரியோர் வார்த்தைகளாக என்ன சொல்கின்றனர்?
இந்தக் கலை வடிவம் வளர்ச்சி அடையச் செய்த சமூகம் அல்லது பொருளாதார நிலைமைகள் என்ன?
இது கடந்து வந்த முக்கியமான மாற்றங்கள் என்னென்ன — வழிபாட்டுச் சடங்கிலிருந்து மேடைக்கு, நிலவுடைமை முறையிலிருந்து தொழில்முறைக்கு, தனிப்பட்ட செய்கையிலிருந்து பொதுச் செய்கைக்கு?
இந்தக் கலையில் காலத்தின் போக்கில் ஏற்பட்டஎல்லா மாற்றங்களுக்கும் மத்தியில் மாறாமல் நிலைத்திருக்கும் கூறுகள் யாவை?
3. அழகியல் தன்மை
இந்தக் கலை வடிவத்தில் ஒலி, அசைவு, உடல், மற்றும் கதைசொல்லல் ஆகியவை ஒன்றுக்கொன்று எவ்வாறு தொடர்புடையவை?
ஒரு நிகழ்வை ஒழுங்கமைக்கும் உள்ளார்ந்த கலை அமைப்புகளில் — தாளம், வரிசை, பாத்திரங்கள், வடிவம் — ஆகியவற்றை ப் பட்டியலிடவும் ?
ஒரே மாதிரி தோன்றும் கலைகளின் வரிசைக்கு மத்தியில் இதன் வடிவத்தை அடையாளம் காணச் செய்யும் தனித்துவமான கூறுகள் எவை?
4. பொருள் மற்றும் நிகழ்த்துகலை அங்கங்கள்
இந்த நிகழ்த்து கலைக்கு இன்றியமையாத இசைக்கருவிகள் அல்லது பொருட்கள் எவை?
நிகழ்வில் மையமான உடல் அல்லது குரல் நுட்பங்கள் எவை?
இந்த வடிவத்தின் ஒருங்கிணைந்த பகுதியாக உள்ள அலங்கார உடைகள், ஒப்பனைகள், அணிகலன்கள், அல்லது பொருள் சார்ந்த தேவைகள் ஏதேனும் உள்ளனவா?
5. சூழல் மற்றும் நிகழ்த்துதலில் வேறுபாடுகள்
இந்தக் கலை வடிவம் எந்த வகையான காலநிலைகளில் நிகழ்த்தப்படுகிறது?
திருமணம், இறுதிச் சடங்கு, அறுவடை, பொது மேடை என வெவ்வேறு சூழல்களில் தாளம், தொனி அல்லது பாணி போன்றவைகள் எவ்வாறு மாறுகிறது?
இந்நிகழ்வின் வேறுபட்ட நிகழ்த்துத்தன்மை பல்வேறு நேரங்களுக்கேற்றார் போல் மாறுவது குறித்து- எடுத்துக்காட்டாக புனிதத் தன்மையுடையதாகக் கருத்தப்படும் சுப நிகழ்வுகளுக்கு, புனிதத் தன்மையற்ற நிகழ்வுகளாகக் கருதப்படும் இறப்பு போன்ற நிகழ்வுகளுக்கு, மதசார்பற்ற நிகழ்வுகளுக்கு மற்றும் கொண்டாட்ட நிகழ்வுகளுக்கு.
6. இட நிலைப்பாடு
இந்த கலை வடிவம் பொதுவாக எங்கு நிகழ்த்தப்படுகிறது — உள்ளறையிலா, மேடைகளிலா, பொது வெளியிலா, கோயிலிலா, தெருவிலா, இவைகளுக்கு இடைப்பட்ட இடத்திலா?
நிகழ்விடத்திற்கும் இந்தக் கலை வடிவத்திற்கும் இடையிலான உறவு ( சம்பந்தம்) என்ன?
இடம் என்பது ஒலியை, அசைவை, அல்லது யார் காணலாம் அல்லது பங்கேற்கலாம் என்பதை எவ்வாறு வடிவமைக்கிறது?
7. அறிவுப்பரிமாற்றம்
இந்தக் கலை வடிவம் எவ்வாறு கற்றுக்கொள்ளப்படுகிறது — பரம்பரை மரபு, குடும்ப கற்றல் முறை, கவனித்தல் வழியாக , அல்லது நிகழ்வில் பங்கேற்பது மூலமாக?
குடும்பம், சமூக உறுப்பினர் தன்மை, ஆகியவை அதை அடுத்தத் தலைமுறைக்குக் கடத்துவதில் என்ன பங்கு வகிக்கின்றன?
ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்கு கலை அறிவை நிலைநிறுத்தும் முறைசாரா கற்பித்தல் நடைமுறைகள் எவை?
8. சமூகப் பொருளாதார மற்றும் கலாச்சாரப் பங்கு
இந்தக் கலை வடிவம் எந்த வித வாழ்வாதாரத்தை வழங்குகிறது — பருவகால வழியிலா அல்லது தொடர்ச்சியாகவா?
நடைமுறைச் சமூகம் இன்று சமூக ரீதியில் எவ்வாறு அங்கீகரிக்கிறது, அல்லது ஓரங்கட்டப்படுகிறது?
இந்த வடிவம் சமூகத்தின் அடையாள உணர்வு மற்றும் சொந்தத் தன்மையில் என்ன பங்கு வகிக்கிறது?
9. இன்றைய நிலைமைகளும் கவலைகளும்
இந்த கலை வடிவம் இன்று எந்த மாதிரியான அழுத்தங்களை (பொருளாதார, சமூக அல்லது கலாச்சார ரீதியிலான) எதிர்கொள்கிறது?
நடைமுறையாளர்களும் சமூகமும் அதன் எதிர்காலத்திற்காக என்ன எதிர்பார்க்கின்றனர்?
என்ன வகையான அங்கீகாரம், பாதுகாப்பு, அல்லது ஆதரவு அவசியமானதாகக் கருதப்படுகிறது?