ஆவணங்களில் உங்களுடைய முழுப் பெயர் எப்படி வர வேண்டும் என்று விரும்புகிறீர்கள்?
உங்களுக்கு வேறு மேடைப் பெயர்களோ, குலப் பெயர்களோ அல்லது பட்டப் பெயர்களோ இருக்கிறதா?
நீங்கள் எந்தச் சமூகத்தை சேர்ந்தவர்? நீங்கள் எந்த பண்பாட்டுக் குழுவைச் சேர்ந்தவர் என்று அடையாளப்படுத்திக் கொள்ள விரும்புகிறீர்கள்?
நீங்கள் பிறந்த ஊர், மாவட்டம், மாநிலம் எது? நீங்கள் பிறந்த வருடம் எது? (துல்லியமான தேதி தேவையில்லை என்றால் வருடத்தை மட்டும் கூறலாம்).
உங்களுக்கு வேறு என்ன கலைகள் தெரியும்.
2. இளமைக் காலமும் கலை அறிமுகமும்
உங்கள் குடும்பப் பின்னணி என்ன? (பெற்றோர் என்ன தொழில் செய்தார்கள், குடும்பத்தில் யாருக்காவது கலைப் பாரம்பரியம் அல்லது சடங்குப் பொறுப்புகள் இருந்ததா?
இந்தக் கலை வடிவத்தை நீங்கள் முதன்முதலில் எப்போது, எங்கே பார்த்தீர்கள் அல்லது தெரிந்து கொண்டீர்கள்?
நீங்கள் கலைப் பழக / கற்றுக்கொள்ளத் தொடங்கியபோது உங்கள் வயது என்ன?
உங்களுக்குக் கலை கற்றுக்கொடுத்த குருக்கள் அல்லது பெரியவர்கள் யார் யார்? அவர்களுக்கும் உங்களுக்கும் என்ன உறவு?
3. பயிற்சியும் முதல் மேடையும்
நீங்கள் இந்தக் கலையை எப்படி கற்றுக்கொண்டீர்கள் / பழகினீர்கள்? (குருகுல முறையா, குடும்ப வழியா அல்லது ஏதேனும் பள்ளியில் கற்றீர்களா?)
உங்கள் கலைப் பயிற்சி எப்படி இருக்கும்? (தினமும் எவ்வளவு நேரம் பயிற்சி செய்வீர்கள், தவறுகளைக் குரு எப்படித் திருத்துவார், நீங்கள் கற்றுக் கொண்ட முக்கியப் பாடம் என்ன?)
ஆரம்பத்தில் நீங்கள் என்னென்ன பாத்திரங்கள் (Roles) அல்லது பங்களிப்புகளைக் (பக்கவாத்தியம்/பின்பாட்டு) கற்றுக்கொண்டீர்கள்?
நீங்கள் முதன்முதலில் மக்கள் முன்னிலையில் மேடையில் பாடிய/ஆடிய அந்த முதல் நிகழ்ச்சி பற்றி உங்களுக்கு நினைவிருக்கிறதா? அது எப்படி இருந்தது?
4. கலைப் பயணம்
நீங்கள் என்னென்ன வகையான நிகழ்ச்சிகளில் பங்கேற்பீர்கள்? (கோயில் திருவிழாக்கள், இறப்பு சடங்குகள், மேடை நிகழ்ச்சிகள், பள்ளி/கல்லூரிகள், தொலைக்காட்சி, வெளிநாட்டு நிகழ்ச்சிகள்?)
நீங்கள் எந்தெந்த ஊர்களுக்குச் சென்று நிகழ்த்தியிருக்கிறீர்கள்? (உள்ளூர், மாநில அளவு, தேசிய அல்லது சர்வதேச அளவா?)
உங்கள் கலை வாழ்வில் முக்கியமான மைல்கற்கள் என்னென்ன? (விருதுகள், வெளிநாட்டுப் பயணங்கள், பெரிய விழாக்கள் போன்றவை).
உங்கள் கலைப் பயணத்தில் நீங்கள் சந்தித்த பெரிய சவால்கள் அல்லது கஷ்டங்கள் என்னென்ன? (பொருளாதார நெருக்கடி, ஆதரவு இல்லாமை, உடல்நலக் குறைவு போன்றவை).
வாழ்வாதாரத்திற்காக இக்கலை தவிர வேறு ஏதேனும் தொழில்கள் செய்கிறீர்களா? அதற்கும் உங்கள் கலைக்கும் தொடர்பு உண்டா?
5. கற்பித்தல்
நீங்கள் மற்றவர்களுக்கு இந்தக் கலையை எப்படிக் கற்றுக்கொடுக்கிறீர்கள்? (வீட்டிலா, கலைக்குழுவாகவா அல்லது பயிலரங்குகள் (Workshops) மூலமாகவா?)
உங்களிடம் தோராயமாக எத்தனை மாணவர்கள் பழகியிருக்கிறார்கள்?
உங்களிடம் கற்றுக்கொண்டு, இப்போது புகழ்பெற்ற கலைஞர்களாக விளங்கும் முக்கிய சீடர்கள் யார் யார்?
அடுத்த தலைமுறைக்குக் கொண்டு சேர்க்கும்போது, இந்தக் கலையில் எதை மாற்றாமல் அப்படியே பாதுகாக்க வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?
6. கலையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள்
நீங்கள் ஆட/பாடத் தொடங்கிய காலத்திற்கும் இப்போதிற்கும் கலையில் என்னென்ன மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன? (ஆடை, பாடல்கள், பார்வையாளர்கள், மைக்/லைட்டிங் தொழில்நுட்பம், மேடை அமைப்புகள் போன்றவை).
இந்தக் கலையில் நீங்களாக ஏதேனும் புதுமைகளை அறிமுகப்படுத்தியிருக்கிறீர்களா? (புதிய பாடல்கள், புதிய கதைக் கருக்கள் அல்லது நிகழ்ச்சி வடிவங்கள்).
இந்தக் கலையில் “எதை எக்காரணம் கொண்டும் மாற்றவே கூடாது” என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? ஏன்?
7. அங்கீகாரமும் சக கலைஞர்களும்
நீங்கள் பெற்ற முக்கியமான விருதுகள் மற்றும் கௌரவங்கள் என்னென்ன?
உங்கள் கலைப் பயணத்திற்குப் பக்கபலமாக இருக்கும் முக்கிய ஆதரவாளர்கள் யார்? (குடும்பம், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள், அரசு அல்லது தனியார் அமைப்புகள்).
உங்களுடன் இணைந்து பயணித்த முக்கியமான சக கலைஞர்கள் (Co-artists / Musicians) யார் யார்? (அவர்களுடைய பக்கங்களையும் இதனுடன் இணைக்க உதவியாக இருக்கும்).
8. உங்கள் சிந்தனைகள் (Personal Reflections)
உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் இந்தக் கலை உங்களுக்கு என்ன மாதிரியான அர்த்தத்தைத் தருகிறது? (மனநிறைவு, ஆன்மீகம், பொருளாதாரம் அல்லது சமூக மதிப்பு?)
இன்றுள்ள இளைய தலைமுறையினருக்கு நீங்கள் கூற விரும்பும் செய்தி என்ன?
எதிர்காலத்தில் இந்த ஆவணத்தைக் கேட்கப் போகும் அல்லது பார்க்கப் போகும் மக்களுக்கு நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?